செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்

மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

Published On 2019-08-26 20:40 GMT   |   Update On 2019-08-26 20:40 GMT
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்குக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், நாட்டின் அதிகபட்ச பாதுகாப்பு வசதியான ‘சிறப்பு பாதுகாப்பு குழு’ (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உயிருக்கான அச்சுறுத்தல் அடிப்படையில், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், மந்திரிசபை செயலகமும் 3 மாதங்களாக ஆய்வு செய்தன. அதில், மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இது, உயிருக்கு அச்சுறுத்தல் அடிப்படையில், பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மட்டுமே தற்போது பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News