செய்திகள்
எதிர் கட்சியை சார்ந்த சில தலைவர்கள்

காஷ்மீருக்கு செல்ல முயன்ற எதிர்கட்சிகளை கடுமையாக சாடிய மாயாவதி

Published On 2019-08-26 14:41 GMT   |   Update On 2019-08-26 14:41 GMT
காஷ்மீருக்கு செல்ல முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.
லக்னோ:

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை  இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் குழு ஒன்று நேற்று முன்தினம்  காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது.

இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், தி.மு.க.வின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் , மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு , இந்திய கம்யூனிஸ்டு , லோக் தந்திரி ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள்  கட்சியின் சரத்யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் தலைவர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லி திருப்பி அனுப்பபட்டனர்.



இந்நிலையில், காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு செல்ல முயன்றது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதி கருத்து தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியாவது:-

சட்டமேதை அம்பேத்கர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ஒருபோதும் ஆதரித்தது இல்லை. அந்த ஒன்றை காரணத்திற்காகவே பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியை சேர்ந்த தலைவர்கள் காஷ்மீருக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு மத்திய பாஜக அரசுக்கும், காஷ்மீர் ஆளுநருக்கும் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம்.

காஷ்மீரில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் எதிர்க்கட்சிகளை சார்ந்த தலைவர்கள் அங்கு நிலைமை சரியாகும் வரை சிறிது காலம் காத்திருங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
Tags:    

Similar News