செய்திகள்
அகிலேஷ் யாதவ்

உபியில் சமாஜ்வாடி கட்சியின் அத்தனை பொறுப்புகளும் கலைப்பு -அகிலேஷ் யாதவ்

Published On 2019-08-24 03:17 GMT   |   Update On 2019-08-24 03:17 GMT
உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக திகழ்ந்து வந்த சமாஜ்வாடி கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

இந்த கூட்டணியில் 5 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து சமாஜ்வாடி உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்தார்.



இந்நிலையில் உபியில் சமாஜ்வாடி கட்சியில் உள்ள அனைத்து இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி குழு, தேசிய தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளையும் கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

மேலும் மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் பதவி மட்டும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குழுவிற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சமாஜ்வாடி கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்கள் சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags:    

Similar News