செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்

Published On 2019-08-23 12:20 GMT   |   Update On 2019-08-23 12:20 GMT
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு என தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச அளவிலேயே பொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.

கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News