செய்திகள்
திரிபுரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவ் வர்மா

திரிபுராவில் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம்

Published On 2019-08-23 11:47 GMT   |   Update On 2019-08-23 11:47 GMT
திரிபுரா மாநிலத்தில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
அகர்தாலா:

திரிபுராவில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவ் வர்மா இந்த நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். 

நீதிமன்ற துவக்க விழாவில் அவர் பேசுகையில், “மத்திய அரசின் முயற்சியால் ஓய்வூதியம் தொடர்பான  வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்து மாநில தலைநகரங்களிலும், தேசிய தலைநகரான டெல்லியிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

திரிபுரா மாநிலத்தில் செயல்முறைகள் அல்லது நிர்வாக தாமதங்கள் காரணமாக ஓய்வூதியம் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை இன்று இரவுக்குள் விசாரித்து தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News