செய்திகள்
வெள்ளத்தில் செல்லும் மக்கள்

உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி

Published On 2019-08-23 05:25 GMT   |   Update On 2019-08-23 05:25 GMT
உத்தபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிர் இழந்துள்ளனர்.
லக்னோ:

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.

பலத்த மழை காரணமாக உத்தரபிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கங்கை, யமுனை நதிகளும் கரை கடந்து பாய்கின்றன. இதனால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

கங்கை, யமுனை நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அலகாபாத், வாரணாசி, கிழக்கு உத்தரபிரதேச பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் பாலியா, காசிப்பூர் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு கங்கை நதியின் வெள்ளப்பெருக்கு குறித்து அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உத்தபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிர் இழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்கிறது. எனவே, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News