செய்திகள்
கழிவு நீர் தொட்டியில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் காட்சி

உ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

Published On 2019-08-22 14:09 GMT   |   Update On 2019-08-22 14:09 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்திர பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்ட்கிராம் என்ற பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தொழிலாளர்கள் அனைவருக்கும் போதுமான பிராண வாயு கிடைக்காமால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.



தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News