செய்திகள்
சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள்

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ

Published On 2019-08-21 16:33 GMT   |   Update On 2019-08-21 16:33 GMT
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை கைதுசெய்து விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.

ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காரில் அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News