செய்திகள்
மாதிரி படம்

குழந்தை அழுததால் மனைவிக்கு தலாக்

Published On 2019-08-21 14:52 GMT   |   Update On 2019-08-21 14:52 GMT
குழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
  
மத்திய பிரதேச மாநிலத்தின் பார்வானி மாவட்டத்தில் உஸ்மா அன்சாரி(21) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4- தேதி இரவு கணவன், மனைவி தங்களுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக அழுதது. உஸ்மா தனது குழந்தை அழுவதை நிறுத்த முயற்சித்தார். ஆனாலும், அந்த குழந்தை தனது அழுகையை நிறுத்தவில்லை. 

குழந்தையின் இடைவிடாத அழுகையால் ஆத்திரமடைந்த உஸ்மாவின் கணவர் தனது தூக்கம் கெடுவதாகவும், குழந்தை அழுகையை உடனடியாக நிறுத்தாவிட்டால் அதை கொன்றுவிடு என தெரிவித்தார்.

இதனால் உஸ்மாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இந்த சண்டையில் உஸ்மாவின் மாமனார் மற்றும் மைத்துனரும் இணைந்து கொண்டு அந்த பெண்ணையும் அவளது குழந்தையையும் வீட்டை விட்டு வெளியே தள்ளினர். மேலும், உஸ்மாவின் கணவர் அவருக்கு மூன்று முறை தலாக் என கூறி உன்னை விவகாரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குழந்தை அழுதற்காக தலாக் கூறி விவாகரத்து செய்த தனது கணவர் கூறித்து உஸ்மா போலீசால் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவர்கள் ‘தலாக்’ என்று 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்டம் நிறைவேறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ‘தலாக்’ என கூறி விவாகரத்து செய்வது அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனைக்குறிய குற்றமாகும்.
Tags:    

Similar News