செய்திகள்
பி.எஸ்.தனோவா

நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்... கவலைப்பட தேவையில்லை.. -பி.எஸ்.தனோவா

Published On 2019-08-21 04:32 GMT   |   Update On 2019-08-21 04:32 GMT
இந்திய விமானப்படை மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும், எவ்வித கவலையும் பெரிதாக தேவையில்லை எனவும் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.
புது டெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது.

மேலும் சர்வதேச அளவில் ஐ.நாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த இந்த காஷ்மீர் விவகாரம் தோல்வியை தழுவியது. இதையடுத்து லடாக் பகுதிக்கு அருகிலுள்ள விமானப்படை தளத்தில் தனது போர் விமானங்களை நிறுத்தியது.



இதனையடுத்து பாகிஸ்தானுக்கான அமெரிக்கா தூதர் அசாத் மஜித் கான் காஷ்மீர் விவகாரத்துக்கு பின்னர், ‘நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து காஷ்மீர் வரை இராணுவப்படைகளை குவிப்போம்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு குறித்து இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் உள்ளோம். பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை விமானங்கள் மட்டுமின்றி இதர விமானங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுபற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை’ என கூறினார். 
Tags:    

Similar News