செய்திகள்
ஹர்தீப் சிங் பூரி

‘அனைவருக்கும் வீடு’ திட்ட இலக்கு அடுத்த ஆண்டே எட்டப்படும் - மத்திய மந்திரி தகவல்

Published On 2019-08-21 03:28 GMT   |   Update On 2019-08-21 03:28 GMT
அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கு அடுத்த ஆண்டே எட்டப்படும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
புதுடெல்லி:

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்படி, 2022-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஏற்கனவே சுமார் 84 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டோம். இந்த ஆண்டு இறுதிக்குள், ஒரு கோடி வீடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்.

எனவே, திட்டமிட்ட காலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இலக்கை எட்ட உள்ளோம்.

தற்போது, 40 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த எண்ணிக்கை 75 லட்சமாக உயரும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டப்படி (நகர்ப்புறம்), இதுவரை 24 லட்சம் வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயரும். கட்டுமான பணியை மத்திய அரசு விரைவுபடுத்தும்.

கூடுதலாக 12 லட்சம் வீடுகள் கட்ட கோரிக்கை வந்துள்ளது.

இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
Tags:    

Similar News