செய்திகள்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட தயார் - சோவன் சாட்டர்ஜி

Published On 2019-08-20 13:23 GMT   |   Update On 2019-08-20 13:23 GMT
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட தயாராக உள்ளேன் என சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த எம்.எல்.ஏ. சோவன் சாட்டர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.
 
இதற்கிடையே, கொல்கத்தா நகரின் முன்னாள் மேயரும், மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சோவன் சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பா.ஜ.க.வில் இணைந்தார்.



இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட தயாராக உள்ளேன் என சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த எம்.எல்.ஏ. சோவன் சாட்டர்ஜி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சோவன் சாட்டர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது விசுவாசமான படைவீரராக இருந்தேன். இப்போது பாஜகவிலும் நான் விசுவாசமுள்ள படைவீரராக இருந்து வருகிறேன். எனவே, அடுத்த தேர்தலில் கட்சி தலைமை மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட சொன்னால் அதற்கு தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News