செய்திகள்
கோப்புப் படம்

போலி ஆவணம் மூலம் அரசு பள்ளி ஆசிரியை வேலை - 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீசார்

Published On 2019-08-20 12:34 GMT   |   Update On 2019-08-20 12:34 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தவர், 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள துகால்பூர் கிராமத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பெர்வைஷ் குமாரி.

அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்களை சரிபார்த்தபோது அவை போலி என தெரிய வந்தது. இதையடுத்து, அவரை காவல்துறை  கைது செய்தது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 2000-ம் ஆண்டு பெர்வைஷ் குமாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளார். அவரது ஆவணங்கள் சரிபார்த்தலின் போது அவர் சமர்ப்பித்திருந்த கல்விச் சான்றிதழ்கள் போலி என தெரிந்தது. இதனால் அவர் 2017-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார், என தெரிவித்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தில் 42 ஆசிரியர்கள் மீது போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News