செய்திகள்
ப.சிதம்பரம்

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

Published On 2019-08-20 02:04 GMT   |   Update On 2019-08-20 02:06 GMT
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு வழக்கு தொடர்பாக, வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி :

காங்கிரஸ் ஆட்சியின்போது விமானத்துறை மந்திரியாக பிரபு பட்டேல் பதவி வகித்தபோது, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு ‘ஏர்பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

மேலும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான விமான இடங்கள் ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதன்பேரில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக முன்னாள் விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, முறைகேடு நடந்தபோது நிதி மந்திரியாக பதவி வகித்த ப.சிதம்பரத்திடம் விசாரிக்க அமாலக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 
Tags:    

Similar News