செய்திகள்
பிரிவினைவாத தலைவர் சையத் கிளானி

பிரிவினைவாத தலைவருக்கு ரகசியமாக இணையதள சேவை வழங்கிய ஊழியர்கள் இருவர் பணி இடை நீக்கம்

Published On 2019-08-19 17:57 GMT   |   Update On 2019-08-19 17:59 GMT
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவருக்கு ரகசியமாக இணையதள சேவை வழங்கிய பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இருவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
காஷ்மீர்:

காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலியாக வதந்திகள் பரவுவதை தடுக்க இணையதள சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் கிளானி வீட்டுக்கு தொலைபேசி மற்றும் அதிவேக இணையதள சேவையை ரகசியமாக வழங்கிய பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சார்ந்த இரண்டு ஊழியர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.



மேலும், காஷ்மீர் முழுவதும் இணையதள சேவையை துண்டித்த போதிலும் எவ்வாறு பிரிவினைவாத தலைவருக்கு மட்டும் ரகசியமாக இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து, மேலும் இதுபோன்ற இணைப்புகள் வேறுயாருக்காவது வழங்கப்பட்டுள்ளதா என விசாரணை நடைபெற்றுவருவதாக பி.எஸ்.என்.எல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News