செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாசிகள்

இந்திய எல்லையில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாசிகள்

Published On 2019-08-19 17:12 GMT   |   Update On 2019-08-19 17:12 GMT
இந்தியாவுக்கு வந்திருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 27 பேர் பாகிஸ்தான் திரும்பிசெல்ல முடியாமல் எல்லையில் தவித்து வருகின்றனர்.
காஷ்மீர்:  

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 42 பேர் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காகவும், வணிக ரீதியிலான நோக்க்கத்தோடும் காஷ்மீருக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் தங்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்த நோக்கத்தோடு வந்திருந்த 42 பேரில் 27 நபர்களுடைய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலாகோட் பகுதிக்கு பேருந்து மூலம் பயணிக்க இருந்தனர்.



ஆனால், இந்தியாவில் இருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் செல்லும் போது வழியில் உள்ள எல்லை கதவுகளை பாகிஸ்தான் தரப்பில் திறக்க அனுமதி கோரியும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆகையால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 27 பேரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் இந்திய எல்லையில் தவித்து வருகின்றனர்.            
 
Tags:    

Similar News