செய்திகள்
ராமலிங்கரெட்டி

தொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட்டி

Published On 2019-08-19 02:56 GMT   |   Update On 2019-08-19 02:56 GMT
தொலைபேசியை ஒட்டுகேட்பது என்பது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.
பெங்களூரு :

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொலைபேசியை ஒட்டுகேட்பது என்பது தவறு. இந்த குற்றச்சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எழுந்துள்ள தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு இதுபற்றி நான் கூறியதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. ஒரு நல்ல புலன் விசாரணை அமைப்பு. அதை பா.ஜனதாவினர் தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

தேர்தலின்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை மத்திய அரசு எவ்வாறு தவறாக பயன்படுத்தியது என்பது உங்களுக்கே தெரியும்?. மத்தியில் இருக்கும் இரண்டு நபர்கள் இவற்றை நிர்வகிக்கிறார்கள்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.
Tags:    

Similar News