செய்திகள்
கேட் 2020

GATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா?... இத கொஞ்சம் கவனிங்க...

Published On 2019-08-18 02:59 GMT   |   Update On 2019-08-20 07:59 GMT
இந்திய தொழில்நுட்ப கழகத்தால் கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்திய தொழில்நுட்ப கழகத்தால் கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசிய அளவில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியல், கட்டிடக்கலை, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர முடியும். எம்.டெக். மற்றும் எம்.எஸ்சி. ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அவ்வகையில் கேட்-2020 தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

GATE 2020 பதிவுமுறை

 
GATE 2020 பதிவுமுறை செப்டம்பர் 3, 2019 இல் துவங்குகிறது. மாணவர்கள் கவனமாக செயல்பட்டு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையான ஆவணங்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை 2019 செப்டம்பர் 24 ஆம் தேதி வரை பூர்த்தி செய்ய முடியும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியே கிரெடிட், டெபிட் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த முடியும். மாணவர்களின் பிரிவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

GATE 2020 தகுதி

GATE 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது தடையில்லை. பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் GATE தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

GATE 2020 தேர்வு முறை

தேர்வுகள் முழுக்க கணினியில் நடத்தப்படும். இது சி.பி.டி. (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்)  என அழைக்கப்படுகிறது. GATE 2020 தேர்வுகள் 2020 பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்வுகள் மூன்று மணி நேரம் நடைபெறும். கேள்விகள் கணிதம், பொறியியல் மற்றும் பொது திறனறி பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

GATE 2020 அனுமதி சீட்டு

மாணவர்கள் தங்களுக்கான அனுமதி சீட்டை (Admit card) 2020 ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அனுமதி சீட்டு ஆன்லைன் மோடில் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் பதிவிட்டு தங்களின் அனுமதி சீட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வு முடிந்த சில நாட்களில் விடைகள் (Answer Key) அதிகாரிகளால் வெளியிடப்படும்.

GATE 2020 முடிவுகள் மற்றும் கவுன்சிலிங்

GATE 2020 தேர்வு முடிவுகள் ஆன்லைனிலேயே வெளியிடப்படும். அதிகாரிகள் தேர்வு முடிவுகளை மார்ச் 16, 2020 அன்று வெளியிடுவர். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மார்ச் 20 முதல் மே 31, 2020 வரை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். பொதுப்படையான கவுன்சிலிங் முறை எதுவும் நடத்தப்படாது. கவுன்சிலிங் 2020 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கும்.
Tags:    

Similar News