செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீவிபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து

Published On 2019-08-17 12:08 GMT   |   Update On 2019-08-17 12:29 GMT
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உள்பட பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளம் முழுவதும் வேகமாக பரவியது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு குழுவினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News