செய்திகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கியது

Published On 2019-08-17 03:24 GMT   |   Update On 2019-08-17 03:24 GMT
ஜம்மு உள்ளிட்ட சில பகுதிகளில் பதற்றம் தணிந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2ஜி இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரிவினைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக தளர்த்தப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் கூறியிருந்தார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், பெரிய அளவிலான அசம்பாவித சம்பங்கள் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை. எனவே, ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் 2ஜி இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள சூழ்நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News