செய்திகள்
பிரதமர் மோடி சுதந்திர தின உரை

தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

Published On 2019-08-15 03:05 GMT   |   Update On 2019-08-15 03:05 GMT
நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
புதுடெல்லி:

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.

இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன். 

பல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும், தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியபோது, நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் பிரதமர் மோடி. 
Tags:    

Similar News