பரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் விக்ரம் கபூர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பதிவு: ஆகஸ்ட் 14, 2019 10:18
பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் கபூர்
பரிதாபாத்:
அரியானா மாநிலம் பரிதாபாத் புதிய தொழில்துறை நகரின் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் விக்ரம் கபூர். இவர் பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர். பரிதாபாத் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், துணை கமிஷனர் விக்ரம் கபூர் இன்று காலை வெகுநேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். தனது சர்வீஸ் துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :