செய்திகள்
கிணற்றில் விழுந்த புலி

கிணற்றில் தவறி விழுந்த புலி -மீட்புப் பணிகள் தீவிரம்

Published On 2019-08-14 04:32 GMT   |   Update On 2019-08-14 04:32 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிணற்றில் புலி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை மீட்க மீட்புப்பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
கட்னி:

மத்திய பிரதேசம் மாநிலத்தின் கட்னி பகுதியில் புலி ஒன்று, வழி தவறி கிணற்றில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரி கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள கிணற்றில் புலி ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. நாங்கள் மீட்புக் குழுவுடன் அங்கு விரைந்தோம்.

அப்பகுதியில் வசிக்கும் மக்களை முதலில் வெளியேறுமாறு கூறினோம். புலியை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்த பிறகுதான் அந்தப் புலி எப்போது கிணற்றில் விழுந்தது, எதற்கு இப்பகுதிக்கு வந்தது என்று தெரியும்.

அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். புலி ஆரோக்கியமாக இருந்தால் அதன் அம்மாவிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்' எனக் கூறினார்.

காடுகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு புலி, யானை, மான் போன்ற வனவிலங்குகள்  நுழைவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News