செய்திகள்
சசிதரூர்

இந்து-பாகிஸ்தான் கருத்து: சசிதரூருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது கொல்கத்தா ஐகோர்ட்

Published On 2019-08-13 15:18 GMT   |   Update On 2019-08-13 15:21 GMT
இந்து- பாகிஸ்தான் உருவாகும் என கருத்து கூறிய திருவனந்தபுரம் எம்.பி சசிதரூருக்கு, கொல்கத்தா ஐகோர்ட் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கொல்கத்தா :

இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட திருவனந்தபுரம் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் பேசுகையில், 
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா இந்து-பாகிஸ்தானாக மாறிவிடும் என குறிப்பிட்டார்.

சசி தரூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்து- பாகிஸ்தான் உருவாகும் என கருத்து கூறிய திருவனந்தபுரம் எம்.பி சசி தரூருக்கு, கொல்கத்தா ஐகோர்ட் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News