செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்துக்கு தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-08-12 20:44 GMT   |   Update On 2019-08-12 20:44 GMT
அனுமதியின்றி சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு நீதிபதி உத்திரவிட்டார்.
புதுடெல்லி:

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘லைம்டோரென்ட்ஸ்’ உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், எனவே அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பின்னர் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News