செய்திகள்
ஆட்டின் உடலில் காணப்படும் எழுத்து

அல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு

Published On 2019-08-11 13:15 GMT   |   Update On 2019-08-11 13:15 GMT
உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க குர்பானி ஆட்டுக்கு அதன் உரிமையாளர் 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார்.
லக்னோ:

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு  8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார்.



’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள  ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துக்காகவே இதை நாங்கள் குறிப்பிட்ட விலைக்கு யாராவது வாங்கிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், முஹம்மது நிஜாமுதீன்.

Tags:    

Similar News