செய்திகள்
சாய்பாபா அறக்கட்டளை

மகாராஷ்டிரா வெள்ளச் சேதத்துக்கு சாய்பாபா அறக்கட்டளை ரூ.10 கோடி நிதியுதவி

Published On 2019-08-10 10:59 GMT   |   Update On 2019-08-10 11:01 GMT
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்படுள்ளனர்.



இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மகாராஷ்ரா மாநிலத்துக்கு ரூ10 கோடி நிதியுதவி வழங்குவதாக சாய்பாபா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்படுள்ளது. 

இந்த நிதியை மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்கில் செலுத்த உள்ளதாக அந்த அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ் ஹவாரி தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News