செய்திகள்
பீகார் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.14.80 கோடி நன்கொடை செய்த பெருநிறுவனங்கள்

பீகார் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.14.80 கோடி நன்கொடை செய்த பெருநிறுவனங்கள்

Published On 2019-08-09 06:49 GMT   |   Update On 2019-08-09 06:49 GMT
பீகார் முதலமைச்சர் நிவாரண நிதி அமைப்பிற்கு, லார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி மற்றும் பேடிஎம் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து ரூ.14.80 கோடி உதவி தொகை வழங்கியுள்ளன.
பாட்னா:

பீகார் முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின் மூலம் பல்வேறு ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த அமைப்பிற்கு  ரூ.14.80 கோடி உதவி தொகை வழங்கியுள்ளன.

இது குறித்து சட்டசபை சபாநாயகர் விஜய் குமார் தெரிவிக்கையில், “லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைலேஷ் ராய் ரூ.10 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் வழங்கினார். அடுத்து ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய தலைமை அதிகாரி சந்தீப் குமார் ரூ.4 கோடிக்கான காசோலையை வழங்கினார். இன்னொரு முக்கிய நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் சார்பிலும் ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது” என்றார்.
 
சமூக அக்கறையில் தன்னார்வம் கொண்ட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களை முதலமைச்சர் நிதிஷ் குமார் மனமார பாராட்டினார்.

Tags:    

Similar News