செய்திகள்
விக்ரம் சயினி

அழகான காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்யலாம்-பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published On 2019-08-07 10:17 GMT   |   Update On 2019-08-07 10:17 GMT
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும்போது, இனி அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சயினி. இவர் பாஜக தொண்டர்கள் மத்தியில் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இனி நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்த அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பாஜக அரசின் நடவடிக்கையால் இனி கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம்.

பாஜக தொண்டர்களுக்கு இந்த முடிவு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகாதவர்கள், அங்கு சென்று இனி மணமுடித்துக் கொள்ளலாம். அதில் இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது.



பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டு வந்தன. காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவரின் மாநில குடியுரிமை ரத்து செய்யப்படும்.

இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் வெவ்வேறு குடியுரிமைகள் இருந்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. ஆனால், இப்போது அப்படி இல்லை. நமது கட்சியில் இருக்கும் முஸ்லிம் தொண்டர்களுக்கு இந்த முடிவு கூடுதல் சந்தோஷமானது.

இனி அவர்கள் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். காஷ்மீர் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவை மொத்த நாடும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags:    

Similar News