செய்திகள்
சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா மறைவு: சத்தியத்தை நிறைவேற்றாமல் சென்றுவிட்டீர்கள்.. -ஸ்மிரிதி வருத்தம்

Published On 2019-08-07 08:57 GMT   |   Update On 2019-08-07 08:57 GMT
மறைந்த சுஷ்மா சுவராஜ் குறித்து மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியான ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
புது டெல்லி:

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான  சுஷ்மா சுவராஜ் (67),  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷ்மா மறைவின் காரணமாக டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை அவரது உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் மறைந்த சுஷ்மா சுவராஜ் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியான ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உங்களிடம் பட்டை தீட்டிக் கொள்ள என்னிடம் கோடாரி இருக்கிறது. ஆனால், நீங்கள் எங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றாமலே சென்றுவிட்டீர்கள்.

பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்த நீங்கள் திடீரென மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மாவின் மறைவால் வாடிய குடும்பத்தை பார்த்தேன். மிகுந்த வேதனையாக இருந்தது’ என கூறியுள்ளார். 
Tags:    

Similar News