செய்திகள்
அர்ச்சனை தட்டு

திருப்பதி கோவிலில் தேங்காய் விலை ரூ.5 குறைப்பு

Published On 2019-08-07 05:29 GMT   |   Update On 2019-08-07 05:29 GMT
திருப்பதி கோவிலில் ரூ.25ஆக இருந்த தேங்காய் கற்பூர செட் விலையை 20 ரூபாயாக குறைத்து தேவஸ்தான பிரத்யேக அதிகாரி உத்தரவிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
நகரி:

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக திரண்டு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி ஆலய கோபுரத்தை நோக்கி கும்பிட்டு விட்டு வருவது வழக்கம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இது போல் தேங்காய் உடைக்கின்றனர். இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு தினமும் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 20 ரூபாயாக இருந்த இதன் விலை ரூ.25-க்கு உயர்த்தப்பட்டது. பக்தர்கள் சரியான சில்லரை கொடுக்க முடியாமல் ரூ.30 கொடுத்தால் மீதி 5 ரூபாய் தருவதில்லை. 50 ரூபாய் தரும் பக்தர்களுக்கு சில்லரை இல்லையென கூறி 2 தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என கவுண்டரில் இருக்கும் ஸ்ரீவாரி சேவகர்கள் கடுமையாக பேசிவந்தனர்.

ஆலய உண்டியலில் தினமும் மூட்டை மூட்டையாக சில்லரை நாணயங்கள் வந்தபோதிலும் தேங்காய் கவுண்டரில் சில்லரை பற்றாக்குறை தீரவில்லை. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான பிரத்யேக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எ.வி.தர்மா ரெட்டியிடம் பக்தர்கள் புகார் செய்தனர்.

அவர் தலையிட்டு ரூ.25ஆக இருந்த தேங்காய் கற்பூர செட் விலையை 20 ரூபாயாக குறைத்து உத்தரவிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
Tags:    

Similar News