செய்திகள்
பரூக் அப்துல்லா

முதுகில் குத்தாதீர்கள்.. என் நெஞ்சில் சுடுங்கள் -பரூக் அப்துல்லா ஆவேசம்

Published On 2019-08-06 12:08 GMT   |   Update On 2019-08-06 12:10 GMT
பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய தி.மு.க. மக்களவை எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த அவையில் இருக்க வேண்டிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் எங்கள் நண்பருமான பரூக் அப்துல்லா எங்கே? என்று கேள்வி  எழுப்பினார்.

டி.ஆர்.பாலு-வின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை யாரும் கைதும் செய்யவில்லை, அவர் வீட்டு காவலிலும் வைக்கவில்லை’ என கூறினார். இந்நிலையில், பரூக் அப்துல்லா அவரது வீட்டின் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

முதுகில் குத்தாதீர்கள்! வேண்டுமென்றால் என் நெஞ்சில் சுடுங்கள். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. எனது மகன் ஒமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளார்.



எனது மாநிலம் எரிந்துக் கொண்டிருக்கும்போது, என்னுடைய மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நான் மட்டும் ஏன்? விருப்பமின்றி அங்கு இருக்க வேண்டும்?

வீட்டு சிறையில் நான் நேற்று இருந்தேன். எனது கதவுகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா பொய் சொல்கிறார். அமைதியான முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்தோம்.

ஆனால், அவர்கள் கொன்றுவிட்டார்கள். ஜனநாயகம், மதச்சார்பற்ற இந்தியாதான் என்னுடைய இந்தியா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    

 
Tags:    

Similar News