செய்திகள்
பாராளுமன்றத்தில் காஷ்மீர் எம்.பி.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - சட்டையை கிழித்து எம்.பி. ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-05 07:39 GMT   |   Update On 2019-08-05 07:39 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய இன்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செயயப்பட்டபோது சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட எம்.பி. தனது சட்டையை கிழித்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய இன்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செயயப்பட்டபோது  சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட எம்.பி. தனது சட்டையை கிழித்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று  தாக்கல் செய்தார்.



மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், அவை கூடியபோது காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான நசீர் அகமது லவாய் மற்றும் எம்.எம்.பயாஸ் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை கி்ழிக்க முயன்றனர். அவர்கள் இருவரும் சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று தனது சட்டையை கிழித்துகொண்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டார். அவையில் இருந்து வெளியே வந்த அவர்கள் இருவரும் பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News