செய்திகள்
குடும்பத்துடன் விவசாயி ரிக்கலா

வேலை இன்றி தவித்த விவசாயி.. அடித்தது ரூ.28 கோடி அதிர்ஷ்டம்...

Published On 2019-08-05 05:19 GMT   |   Update On 2019-08-05 05:19 GMT
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி வேலை இன்றி, துபாயில் இருந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவருக்கு ரூ.28 கோடி கிடைத்தது எப்படி என்று பார்ப்போம்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்கலா. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் இப்போது ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

விவசாயியான இவர், சமீபத்தில் துபாய்க்கு  வேலை தேடி சென்றுள்ளார். அங்கு வேலை எதுவும் அமையாததால், விரக்தியில்  மீண்டும் ஊருக்கு திரும்ப தயாராகிவிட்டார்.

ஊருக்கு செல்வதற்கு முன் துபாய் பிக் டிக்கெட் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்க வேண்டும் என எண்ணியுள்ளார். தனது மனைவிக்கு போன் செய்து டிக்கெட் வாங்க பணம் ஏற்பட்டு செய்யுமாறு கூறியுள்ளார். நண்பர் உதவியுடன் பணத்தை மனைவியிடம் இருந்து பெற்று, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிவிட்டு ஊர் திரும்பியுள்ளார்.



அதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை அவருக்கு பரிசு விழுந்ததாக போன் வந்திருக்கிறது. அதுவும் பரிசுத்தொகை, 15 மில்லியன் திர்ஹாம்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 கோடி) ஆகும். இதனை ரிக்கலாவால் முதலில் நம்பவே முடியவில்லை. திகைத்துப்போய் நின்றார்.

இது குறித்து ரிக்கலா கூறுகையில், 'நான் முன்னதாக ஒருமுறை துபாயில் டிரைவராக பணியாற்றி இருக்கிறேன். அப்போது சீட்டு வாங்குவேன். என்னிடம் பணம் இல்லாததால், மனைவியிடம் கேட்டேன். நண்பர் ரவி மூலம் கொடுத்தனுப்பினார். இதற்கு முழு காரணமும் என் மனைவிதான்' என மழ்கிச்சியுடன் கூறினார்.



Tags:    

Similar News