செய்திகள்
உயரத்தில் இருந்து காணப்படும் பூமியின் தோற்றம்

சந்திரயான்2 எடுத்த பூமியின் விதவிதமான படங்களை வெளியிட்டது இஸ்ரோ

Published On 2019-08-04 08:45 GMT   |   Update On 2019-08-04 08:45 GMT
சந்திரனில் இறங்கி ஆராய்ச்சி செய்ய சென்றுள்ள சந்திரயான்-2 விண்கலம் பூமியை பலவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ முதல்முறையாக இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 வரும் 20-ம் தேதி சந்திரனில் தடம் பதிக்கவுள்ளது. இந்த காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் பூமியை பலவிதமான கோணங்களில் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ முதன்முறையாக இன்று வெளியிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் மூலம் பூமியை இதுவரை நாம் காணாத புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.
Tags:    

Similar News