செய்திகள்
திருப்பதி கோவில்

ஒரே நாளில் திருப்பதியில் ரூ.3.97 கோடி உண்டியல் காணிக்கை

Published On 2019-07-31 05:29 GMT   |   Update On 2019-07-31 05:29 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திங்கட்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.97 கோடி வசூலாகியுள்ளது.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திங்கட்கிழமை முழுவதும் 86,372 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 28,972 பேர் முடி காணிக்கை செலுத்தினர். நேற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

அவர்கள் 7 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன் ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.

திங்கட்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.97 கோடி வசூலாகியுள்ளது.

திருப்பதியில் ஆகஸ்டு மாத நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் ஆண்டுதோறும் பலவிதமான உற்சவங்கள் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்கள் என வகைப்படுத்தி உள்ளது.

இதில் ஏழுமலையானுக்கு நடைபெறும் உற்சவங்கள் மட்டுமல்லாமல் அவரின் தொண்டர்களான ஆழ்வார்களின் திருநட்சத்திரங்களையும் உற்சவங்களாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

மாதந்தோறும் திருப்பதியில் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி ஆகஸ்டு மாதம் திருப்பதியில் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்டு 3-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூரம் உற்சவம், 5-ந்தேதி கருட பஞ்சமி, 6-ந்தேதி கல்கி ஜெயந்தி, 9-ந்தேதி வரலட்சுமி விரதம், தரிகொண்ட வெங்கமாம்பா ஜெயந்தி, 10-ந்தேதி பவித்ரா உற்சவத்துக்கு அங்குரார்ப்பணம், 11-ந்தேதி மதத்ரய ஏகாதசி, 11,13-ந்தேதி வருடாந்திர பவித்ரோற்சவம், ஆக.12-ந்தேதி நாராயணகிரியில் சத்ரதபனோற்சவம், 15-ந்தேதி ஆடி பவுர்ணமி, ஹயக்கிரீவ ஜெயந்தி, விகனஸ் ஜெயந்தி, 16-ந்தேதி ஏழுமலையான் விகனஸ் ஆச்சார்யர் சந்நிதி எழுந்தருளல், 23-ந்தேதி கோகுலாஷ்டமி, 24-ந்தேதி உட்லோற்சவம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News