செய்திகள்
குமாரசாமி

பாஜக அரசை கவிழ்க்க முயற்சி செய்யமாட்டோம்- குமாரசாமி

Published On 2019-07-30 02:25 GMT   |   Update On 2019-07-30 02:25 GMT
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசை கவிழ்க்க முயற்சி செய்யமாட்டோம் என்று சட்டசபையில் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி குழு தலைவர் குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

எனது தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்தது. இந்த அரசை பா.ஜனதா எப்படி செயல்பட்டு கவிழ்த்தது என்பது அனைவருக்கும் தெரியும். எது எப்படி இருந்தாலும் நீங்கள் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளர்கள். மக்களின் ஆதரவால் நீங்கள் ஆட்சிக்கு வரவில்லை. நீங்கள் நல்லாட்சியை நடத்துங்கள். உங்களின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யமாட்டோம்.

கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பெங்களூருவுக்கும், மும்பைக்கும் தனி விமானத்தில் சென்று வந்தனர். இன்று அவர்கள் சாதாரண விமானத்தில் வந்துள்ளனர். எங்கள் வரிசையில் இருப்பவர்களை இழுக்க பா.ஜனதாவினர் முயற்சி செய்ய வேண்டாம்.



ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி, தனியார் கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கினேன். கடந்த 14 மாதங்களில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துவிட்டதாக எடியூரப்பா கூறினார். நாங்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்துள்ளோம்.

நாங்கள் என்னென்ன முடிவுகளை எடுத்துள்ளோம் என்பதை கோப்புகளை எடுத்து பாருங்கள் தெரியும். ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக நாங்கள் பாடுபட்டோம்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Tags:    

Similar News