செய்திகள்
நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.விஸ்வநாத்

சபாநாயகர் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - நீக்கப்பட்ட 14 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம்

Published On 2019-07-28 12:14 GMT   |   Update On 2019-07-28 12:14 GMT
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரால் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரப்படும் என தெரியவந்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் 2023 மே 15ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பா.ஜ.க. அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில்  4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரால் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14  எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரப்படுகிறது.
 


இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஏ.எச்.விஸ்வநாத், ‘இந்த தகுதி நீக்கம் சட்டவிரோதமானது. சபாநாயகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்கள் ஆஜராக தவறினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் தகுதி நீக்கம் செய்துவிட முடியாது.

இதுவரை மொத்தம் 20 எம்.எல்.ஏ.க்கள் இப்படி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரது முடிவை எதிர்த்து நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ என குறிப்பிட்டார்.
 
Tags:    

Similar News