செய்திகள்
நிலநடுக்க அளவை காட்டும் கருவி

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலி

Published On 2019-07-25 05:39 GMT   |   Update On 2019-07-25 05:39 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண்மணி பலியானார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணி முதல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு உண்டானது. சுமார் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. 

தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பால்கர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் உறங்கி கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மகாராஷ்டிராவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, பால்கர் மாவட்டத்தின் தஹானு பகுதியில் உள்ள வசலபாடா என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்தது. இதில்  ரிஷ்மா மெக்வாலே (55) என்ற பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:    

Similar News