செய்திகள்
மாதிரிப் படம்

புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்2

Published On 2019-07-24 12:03 GMT   |   Update On 2019-07-24 12:03 GMT
இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் இன்று நுழைந்தது.

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.



இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டவாறுஇன்று பிற்பகல் 2.52 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து சந்திரனின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2  விண்கலம் நுழைந்தது.

சந்திரயான்-2 செப்டம்பர் 6-ந் தேதி சந்திரனை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News