செய்திகள்
பாராளுமன்றம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2019-07-24 03:05 GMT   |   Update On 2019-07-24 03:05 GMT
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

தமிழகத்தின் அருகே உள்ள புதுச்சேரி, மத்திய அரசின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசமாக இருக்கிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அங்குள்ள அரசியல் கட்சிகளால் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, புதுச்சேரி சட்டசபையில் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அப்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டசபை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளது.

இறுதியாக, கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம், இந்த அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டது. அதில், தற்போதைய ஏற்பாட்டையே தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக்கோரும் யோசனை எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News