செய்திகள்
குமாரசாமி பெயரில் வெளியான போலி ராஜினாமா கடிதம்.

குமாரசாமி பெயரில் போலி ராஜினாமா கடிதம்

Published On 2019-07-23 01:56 GMT   |   Update On 2019-07-23 01:56 GMT
முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம், கொறடா உத்தரவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு கூறப்பட இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் சட்டசபையில் நேற்று இரவு கூச்சல், குழப்பம் உண்டானது.

அந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த போலி கடிதத்தை யாரோ திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக கூறி சட்டசபையில் மீண்டும் ஆளுங்கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News