செய்திகள்
டிகே சிவக்குமார்

தகுதி நீக்கம் குறித்து இன்று முடிவு- அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மந்திரி டிகே சிவக்குமார் எச்சரிக்கை

Published On 2019-07-23 01:45 GMT   |   Update On 2019-07-23 01:45 GMT
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. உங்களது எம்.எல்.ஏ. பதவியை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) காப்பாற்றி கொள்ளுங்கள் என்று அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மந்திரி டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இன்றைய (அதாவது நேற்று) சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பொருந்தும் என்று கூறியுள்ளார். இதனால் கொறடா உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அமலில் உள்ளது.

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்வது குறித்து இன்று காலை 11 மணிக்கு முடிவு செய்யப்படும். இதனால் உங்களது எம்.எல்.ஏ. பதவியை நீங்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) காப்பாற்றி கொள்ளலாம்.

உங்களை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தகுதிநீக்கம் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றால் மும்பை, கோவாவில் இருந்தாலும் கூட அரசியலமைப்பு புத்தகத்தை படியுங்கள். உங்களை பா.ஜனதாவினர் பாதை மாற்றுகிறார்கள். பா.ஜனதாவில் சேர்ந்தால் என்ன கிடைக்குமோ? அதை நாங்கள் கொடுக்கிறோம். நண்பர்களே, இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News