செய்திகள்
சபாநாயகர் ரமேஷ்குமார்

கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு

Published On 2019-07-22 18:34 GMT   |   Update On 2019-07-22 18:39 GMT
கர்நாடக சட்டப்பேரவை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார்.



17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டது. சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இறுதியில் இன்று மாலை 6 மணிக்கு மெஜாரிட்டியை நிரூபிப்பதாக குமாரசாமி அறிவித்தார். இதற்காக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. மாலை கூடியபோது காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூச்சலிட்டனர். அதேவேளையில் இன்று எவ்வளவு நேரம் ஆனாலும் வாக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும் என பா.ஜனதா எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.  காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் சபை கூடிய பின் நள்ளிரவு 12 மணி வரை நான் இருக்கத் தயார். ஏன் அமளியில் ஈடுபடுகிறீர்கள். இது சரியான நடைமுறை அல்ல. எதிர்க்கட்சிகளை பேச விடாமல் இருக்க முடியுமா? என்று காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்களை நோக்கி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ எச்.கே. பாட்டீல் ‘‘நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு பேசுவதற்கு உரிமை உள்ளது. இதுகுறித்து விவாதம் நடத்தலாம்’’ என்று கூறினார்.

இதற்கு சபாநாயகர் ‘‘என்னை தன்னிச்சையாக முடிவு எடுக்கும் நிலைக்கும் தள்ளிவிடாதீர்கள். அதன்விளை பேரழிவுக்குத் தள்ளிவிடும்’’ என்றார்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.   மேலும் இன்று மாலை 6.00  மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News