செய்திகள்
கண்காணிப்பு பணியில் இந்திய வீரர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அதிரடி தாக்குதல் - இந்திய வீரர் பலி

Published On 2019-07-22 10:07 GMT   |   Update On 2019-07-22 10:07 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை  நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்தினர். இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இருதரப்பினருக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் இன்றைய மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News