செய்திகள்
பிரதமர் மோடி

சுதந்திரதின விழாவில் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு 850 பேர் யோசனை

Published On 2019-07-20 09:10 GMT   |   Update On 2019-07-20 09:10 GMT
ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரதின விழாவில் பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 850 பேர் இமெயிலில் குறிப்புகளை அனுப்பினார்கள்.

புதுடெல்லி:

சுதந்திர தின விழாவையொட்டி வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். விழாவில் தான் பேசுவதற்கு பொதுமக்கள் யோசனை வழங்குமாறு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டார்.

அதில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் நான் உரை நிகழ்த்த உங்களது மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களது கருத்துக்கள் 130 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு அரணாக திகழும் என்று கூறி இருந்தார்.

அதைத் தொடர்ந்து 2 மணி நேரத்தில் அவருக்கு 850 பேர் மோடியின் நமோ ஆப் பில் தங்கள் ஆலோசனைகளை பதிவு செய்தனர். அனைவருக்கும் சுத்தமான மற்றும் தரமான குடிநீர், தூய்மை இந்தியா திட்டம், புதுப்பிக்கப்பட்ட மின் சக்தி போன்ற திட்டங்கள் சென்றடையும் வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதிவேக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உரை இருக்க வேண்டும் என யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News