செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்

திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Published On 2019-07-20 04:38 GMT   |   Update On 2019-07-20 04:38 GMT
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2-வது மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் பைக்கில் பக்தர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் ஹரிணி என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றது.

இதனைக்கண்ட பைக்கில் சென்ற பக்தர் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றார். ஏற்கனவே கடந்த மாதம் அந்த இடத்தில் சிறுத்தை 2 பெண்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

அப்போது இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பைக்குகளுக்கும், பக்தர்கள் பாதயாத்திரை செல்லக்கூடிய அலிபிரி மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு சிறுத்தை மலைப்பாதையில் சாலையை கடந்துள்ளது. பக்தர்களிடம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News