செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அசாம் குடியுரிமை பிரச்சினை: இறுதி பட்டியல் வெளியிட 31-ந் தேதி வரை அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை

Published On 2019-07-19 09:46 GMT   |   Update On 2019-07-19 09:49 GMT
அசாம் குடியுரிமை பிரச்சினை தொடர்பாக இறுதி பட்டியலை வெளியிட வருகிற 31-ந் தேதி வரை அவகாசம் தேவை என மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி குடியேறி இருப்பதாக புகார் உள்ளது. எனவே குடியுரிமை பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிடுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மற்றும் அசாம் மாநில அரசுகள் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் தாஸ்கர் மேத்தா வாதாடினார். அப்போது அசாமுக்குள் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி குடியேறி உள்ளனர். எனவே, தேசிய குடியுரிமை பட்டியலை இறுதி செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும், உலகின் அகதிகள் தலைநகராக இந்தியா இருக்க முடியாது’ என்றார்.

Tags:    

Similar News