செய்திகள்
சித்தராமையா

சட்டசபையில் தன்னை எதிர்க்கட்சி தலைவர் எனக்கூறிய சித்தராமையா

Published On 2019-07-19 01:54 GMT   |   Update On 2019-07-19 01:54 GMT
சித்தராமையா சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் என்று கூறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவர் எனக்கூறியதால் சட்டசபையில் இருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிரித்தபடி மேஜையை தட்டி வரவேற்றதுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது முதலில் முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். அதன்பிறகு, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா எழுந்து பேசினார்.

அப்போது அவர், ‘நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக சில விதிமுறைகளை பற்றி நாங்கள் பேச விரும்புகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை. எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. கொறடா உத்தரவு பிறப்பித்தும் எம்.எல்.ஏ.க்கள் பலர் சட்டசபைக்கு வரவில்லை. நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஆவேன்’ என்றார்.

இந்த நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் என்று கூறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவர் எனக்கூறியதால் சட்டசபையில் இருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிரித்தபடி மேஜையை தட்டி வரவேற்றதுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, ‘இதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக 4 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அதனால் எதிர்க்கட்சி தலைவர் என தவறாக சொல்லி விட்டேன்’ என்று கூறினார். 
Tags:    

Similar News