செய்திகள்
நெல்சன் மண்டேலாவுடன் பிரியங்கா

உலகம் இவரை மிஸ் பண்ணிவிட்டது... பிரியங்கா நினைவு கூர்ந்த உலக தலைவர்

Published On 2019-07-18 10:11 GMT   |   Update On 2019-07-18 11:37 GMT
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா, உலகமே இவரைப் போன்ற மனிதர்களை மிஸ் செய்துவிட்டதாக கூறி, புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த உலக தலைவர் யார் என்பதை பார்ப்போம்.
புது டெல்லி:

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருக்கும் பிரியங்கா, இன்று முக்கியமான உலக தலைவர் ஒருவரை நினைவு கூர்ந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர் தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. அந்நாட்டில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவரும் இவரே.

அதற்கு முன்பாக நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் மண்டேலா. தொடக்கத்தில் அறப்போர் வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

மரபுசாரா கொரில்லா போர்முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். அதன் பின்னர் மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் முக்கிய சாட்சியமாக விளங்குகிறது.



சிறையில் பெரும்பாலான காலத்தை இவர், ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. அதன்பின்னர் கடந்த 2013ம் ஆண்டு மண்டேலா உயிரிழந்தார்.

இதையடுத்து மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக இன்றளவும் விளங்குகிறார். இவருக்கு இன்று 101வது பிறந்தநாள் ஆகும். இதனை நினைவு கூரும் வகையில் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலகம் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை மிஸ் பண்ணிவிட்டது.

அவரது வாழ்க்கை உண்மை, அன்பு, மற்றும் சுதந்திரத்திற்கு உதாரணமாக விளங்கியது. நான் அவரை மாமா எனும் உறவுமுறையோடுதான் அழைப்பேன். அவர் எப்போதும் என் வழிகாட்டியாகவும், உத்வேகமும் ஆவார். இந்த புகைப்படத்தில் என் மகனின் தலைப்பாகையை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News